‘ரஜினி முருகன்’ படப்பிடிப்பு நிறைவு…

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி மற்றும் பலர் நடிக்கும் ‘ரஜினி முருகன்’ படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்தது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இந்தப் படத்தின் அனைத்து விதமான வியாபாரங்களும் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது.

விரைவில் இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட உள்ளார்கள். ஜுன் மாதம் இசை வெளியீடும், ஜுலை மாதம் பட வெளியீடும் நடைபெற உள்ளது.

Read Previous

‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ – மே 15ல் வெளியீடு…

Read Next

OK Kanmani – Parandhu Sella Vaa – Song Promo