ஸ்டுடியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையைமப்பில், சூர்யா, நயன்தாரா, பிரணீதா மற்றும் பலர் நடிக்கும் ‘மாஸ்’ படம் மே மாதம் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா – வெங்கட் பிரபு முதன் முறையாக இணையும் இந்தப் படம் ஆரம்பமான நாளிலிருந்தே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு பரபரப்பான த்ரில்லர் படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் முதல் பார்வையில் வித்தியாசமான சூர்யாவைக் காட்டியதன் மூலமே நிச்சயம் இந்தப் படம் வேறொரு மாதிரியான படமாக இருக்கும் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது.