கல்லூரி மாணவர்கள் உருவாக்கத்தில் ‘மய்யம்’…

பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர் முற்றிலும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் உருவாக்கும் ‘மய்யம்’ என்ற ஒரு படத்தைத் தயாரித்து முடித்திருக்கிறார்.

அனுபவம் வாய்ந்த இயக்குனர்களே தற்போது தடுமாறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை வைத்து படம் தயாரிக்கிறீர்களே என்று கேட்டதற்கு ஏ.பி.ஸ்ரீதர் அளித்த பதில்…

“கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்தான் இன்று ஒரு படத்தை அதிகமாக விமர்சிப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களை வைத்தே ஒரு படத்தைத் தயாரித்தால் என்ன என்று தோன்றியது. இந்தப் படத்தை இயக்கியிருக்கும் ஆதித்யா இதற்கு முன் இயக்கிய ‘ஓட ஓட’ என்ற குறும்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் பின் ஆதித்யாவை அழைத்து இந்த ‘மய்யம்’ படம் இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தேன்,” என்கிறார் ஸ்ரீதர்.

கமல்ஹாசன் அவர்கள் நடத்திய இதழின் பெயர்தான் ‘மய்யம்’. நண்பர் ஏ.பி.ஸ்ரீதருக்காக அந்தத் தலைப்பை வைத்துக் கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறார்.

ஒரு ஏடிஎம் சென்டரில் நடக்கும் கொலையும் அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை. 24 மணி நேரத்திற்குள் நடக்கும் நிகழ்வாக படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் சகோதரியின் மகனான கேஆர் இசையமைக்கிறார். படத்தில் நவீன் சஞ்சய், குமரன் தங்கராஜன், ஹாஷிம் ஜெயின், முருகானந்தம், பூஜா தேவரியா, சுகாசனி குமரன் ஆகியோருடன் ரோபோ சங்கர் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்த ஏழு பேரைச் சுற்றியே படத்தின் கதை நகர்கிறதாம்.

படப்பிடிப்பு முடிவடைந்துள்ள இந்தப் படத்தை அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

Read Previous

சாதிப் பிரச்சனைதான் ‘பாகுபலி’ கதையா ?

Read Next

‘வாலு’வை வர விட மாட்டாங்க போல இருக்கே…

Most Popular