‘வாலு’வை வர விட மாட்டாங்க போல இருக்கே…

பல சிக்கல்கள் தடைகளைத் தாண்டி ‘வாலு’ படம் வரும் 17ம் தேதி வெளியாகும் என கடந்த சில நாட்களாகவே விடாமல் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதனிடையே மேஜிக் ரேஸ் என்ற நிறுவனம் படத்தின் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய உரிமைகளை எங்களுக்கு 2013ம் ஆண்டிலேயே கொடுத்து விட்டு இப்போது வேறு நிறுவனத்திற்கு எப்படிக் கொடுக்கலாம் என்று கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.

விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளதாம். அதன் பிறகுதான் படத்தின் வெளியீடு பற்றிய உறுதியான தகவல் தெரிய வரும் என்கிறார்கள்.

‘வாலு’ என எப்போது பெயர் வைத்தார்களோ, பிரச்சனை நீ…….ண்டு கொண்டே போகிறது….

Read Previous

கல்லூரி மாணவர்கள் உருவாக்கத்தில் ‘மய்யம்’…

Read Next

‘முத்த செல்ஃபி’ கேட்கும் மனிஷா யாதவ்..

Most Popular