‘முத்த செல்ஃபி’ கேட்கும் மனிஷா யாதவ்..

‘வழக்கு எண் 18\9’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். அதன் பின் ‘ஆதலினால் காதல் செய்வீர்’ படத்தில் நாயகியாக நடித்தார். இந்தப் படம் மட்டுமே அவருக்கு ஓரளவுக்கு பெயரைப் பெற்றுத் தந்தது.

அடுத்தடுத்து நடித்த ‘ஜன்னல் ஓரம்,பட்டைய கௌப்பணும் பாண்டியா’ ஆகிய படங்கள் மற்றுமொரு படங்களாகவே அமைந்தன.

தற்போது ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் ஒரு முத்தக் காட்சியில் மனிஷா யாதவ்வுடன் நடிக்கும் போது ஜி.வி.பிரகாஷ் 36 டேக்குகள் வாங்கியதாக செய்திகளை கிளப்பி விட்டிருந்தார்கள். ஆனால், வெறும் 4 டேக்குகள் மட்டுமே ஜி.வி. பிரகாஷ் வாங்கியதாக இயக்குனரே தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மேலும் அந்த முத்தத்தை விளம்பரப்படுத்த முத்தக் காட்சியில் நடித்துள்ள மனிஷா யாதவ், ‘முத்த செல்ஃபி’யை டிவிட்டரில் பதிவேற்றுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு அவரும் சில ‘முத்த செல்ஃபி’களை அவருடைய டிவிட்டரில் போட்டிருக்கிறார்.

இருக்கிற செல்ஃபி தொல்லையே தாங்கலை, இதுல முத்த செல்ஃபி வேறயா…

Read Previous

‘வாலு’வை வர விட மாட்டாங்க போல இருக்கே…

Read Next

MSV still in hospital

Most Popular