அஜித் பற்றி வதந்தி பரப்பும் முட்டாள்கள்

சமூக வலைத்தளங்கள் எவ்வளவு மோசமாக சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக சற்று முன் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திராவின் டிவிட்டர் கணக்கிலிருந்து ‘அஜித் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்,” என்று ஃபோட்டோஷாப் செய்த பதிவு ஒன்றை சில முட்டாள்கள் ஃபேஸ்புக் போன்றவற்றில் பரப்பி வருகிறார்கள்.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவருடைய டிவிட்டர் கணக்கில், “அஜித் உடல்நிலை பற்றி சில கேலவமான குணம் கொண்டவர்கள் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அஜித் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் நலமாகவும் உள்ளார்” என அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு பதிவைப் போட்டிருக்கிறார்.

அங்க தொட்டு, இங்கே தொட்டு இப்போது ஒருவரது  உடல்நிலை பற்றி மிகவும் மோசமான வதந்தி பரப்பும் வரை சில முட்டாள்கள் சமூக வலைத்தளங்களில் செயல்பட்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

லைக்குகளுக்காகவும், ரிடிவீட்டுகளுக்காகவும் சமூக வலைத்தளங்களில் ஈடுபடுபவர்களில் பலர் தங்களை பெரிய ஆட்களாக காட்டிக் கொள்ள இப்படிப்பட்ட கேலவமான செயல்களைச் செய்து வருகிறார்கள்.

அவர்களை திரையுலகத்தில் உள்ள ஒரு பிரிவினரும் தலை மீது தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள் என்பது அதைவிட கொடுமை.

Read Previous

Vedalam – Aaluma Doluma Extended Mix Video

Read Next

Siddharth’s next ‘Jil Jung Juck’…

Most Popular