ஒரே படத்தில் ராதிகா, சுஹாசினி, ஊர்வசி, குஷ்பு

‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன்.

அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘கண்கள் இரண்டால்…’ பாடல் சூப்பர் ஹிட்டாகி எவர் கிரீன் பாடல்களில் ஒன்றாக அமைந்தது. அடுத்து அவர் இசையமைத்த படங்களில் ‘பசங்க’ படம் மட்டுமே சூப்பர் ஹிட்டான படமாக அமைந்தது.

ஆனால், அதன் பின் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த சில படங்களும், பாடல்களும் ஹிட் ஆகவில்லை. அடுத்து அவரைத் தேடி பெரிய அளவில் பட வாய்ப்புகளும் வராததால் கடந்த ஆண்டில் ‘வானவில் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.

தற்போது ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் ராதிகா, சுஹாசினி, ஊர்வசி, குஷ்பு முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

80, 90களில் முன்னணி ஹீரோயின்களாகவும், சிறந்த நடிகைகள் என பெயர் எடுத்த இவர்கள் முதன்முறையாக ஒரே படத்தில் இணைந்து நடிப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் ஆஸ்திரேலியாவில் ஆரம்பமாக உள்ளது. அதற்காக படப்பிடிப்புக் குழுவினர் இன்றிரவு ஆஸ்திரேலியா பயணம் ஆகிறார்கள். அக்டோபர் வரை அங்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

குறுகிய காலத்தில் இப்படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.

வித்தியாசமான கூட்டணி…வசந்தனுக்கு வசந்தம் வீசட்டும்…

Read Previous

இரண்டு ‘சூப்பர் ஸ்டார்கள்’ சந்திப்பு

Read Next

தொடரி – விமர்சனம்

Most Popular