இந்த உலகத்தில் லட்சோப லட்சம் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருக்கலாம். ஆனால், கிரிக்கெட்டிலும், சினிமாவிலும் தங்களது தனித் திறமையில் ‘சூப்பர் ஸ்டார்’களாக உயர்ந்தவர்கள் ரஜினிகாந்த், தோனி இருவர்.
ரஜினிகாந்த் இளம் வயதில் பேருந்தில் நடத்துனராகப் பணிபுரிந்தவர். தோனி, ரயில்வேயில் டிக்கெட் கலெக்டராகப் பணிபுரிந்தவர்.
இருவருமே அவரவர் துறையில் தங்களது திறமை, விடா முயற்சி, உழைப்பு ஆகியவற்றால் உச்சத்தைத் தொட்டவர்கள்.
தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘M.S.DHONI UNTOLD STORY’ திரைப்படத்தை விளம்பரப்படுத்த தோனி நேற்று சென்னைக்கு வந்திருந்தார்.
அதோடு, படத்தின் நாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புத்-துடன் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசினார்.
படத்தின் வெற்றிக்கு ரஜினிகாந்த் அப்போது வாழ்த்து தெரிவித்தார்.
இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு அடுத்த வாரம் வெளியாக உள்ளது.