ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ்பாபு படத்தின் பெயர் ‘ஏஜென்ட் சிவா’ ?

தெலுங்குத் திரையுலகில் முன்னணி ஹீ‘ரோக்களில் ஒருவராக இருக்கும் மகேஷ்பாபு தமிழில் அறிமுகமாகும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் மாறி மாறி நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக தெலுங்குத் திரையுலக வட்டாரங்களில் இப்படத்திற்கு ‘ஏஜென்ட் சிவா’ எனப் பெயர் வைத்துள்ளதாகத் தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து மகேஷ்பாபு ரசிகர்கள் அந்தப் பெயருடன் கூடிய போஸ்டர்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதனிடையே படத்திற்கு ‘அபிமன்யு, எனிமி’ ஆகிய பெர்களும் பரிசீலனையில் உள்ளதாகச் சொல்கிறார்கள்.

தீபாவளி அன்று படத் தலைப்புடன் முதல் பார்வை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

கீர்த்தி சுரேஷ் அலை வீசுகிறதா…?

Read Next

தனுஷ் ஜோடியாக மடோனா செபாஸ்டியன்