தியேட்டர்கள் இல்லை, தள்ளிப் போன ‘ப்ரூஸ் லீ’

ஜி.வி.பிரகாஷ், கிரிதி கர்பந்தா மற்றும் பலர் நடித்த ‘ப்ரூஸ் லீ’ படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது திடீரென பட வெளியீட்டை பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைத்துவிட்டார்கள்.

ஜி.வி.பிரகாஷ் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படங்கள் ஒன்று கூட வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை. அதனால், ‘ப்ரூஸ் லீ’ படத்திற்கு வியாபார ரீதியாக வரவேற்பு இல்லையாம். மேலும், பொங்கலுக்கு ‘பைரவா’ படம் வெளிவருவதால் அந்தப் படத்துடன் போட்டி போட்டு வசூலைப் பெற முடியாது என வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் தயக்கம் காட்டியிருக்கிறார்கள்.

அதனால், படத்திற்கு மிகக் குறைவான விலையை நிர்ணயித்தார்களாம். படத் தயாரிப்புச் செலவை விட அவர்கள் கேட்ட தொகை குறைவாக இருந்ததால் இப்போதைக்கு படத்தை வெளியிடுவதை தயாரிப்பு நிறுவனத்தினர் தள்ளி வைத்துவிட்டார்களாம்.

ஜனவரி 26 வெளியிடலாம் என நினைத்தால் அன்று ‘எஸ் 3, சிவலிங்கா’ ஆகிய படங்கள் ஏற்கெனவே தியேட்டர்களை புக் செய்து வைத்துள்ளதால் அன்றும் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடைசியில் வேறு வழியில்லாமல் பிப்ரவரியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

டிவிட்டர் டிரெண்டிங் இருந்தாலே போதும் தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தைப் பிடித்து விடலாம் என ஆட்களை ‘செட்டப்’ செய்து தன்னைப் பற்றி அடிக்கடி பரபரப்பு ஏற்படுமாறு செய்திகளை வெளியிட்டு வந்தார் ஜி.வி.பிரகாஷ். அவையெல்லாம் கடைசியில் ஒன்றுமில்லை என நிரூபணமாகிவிட்டது.

இனியாவது, ஜி.வி.பிரகாஷ் வெற்று பரபரப்புகளை செய்யாமல் இருந்தால் சரி என்கிறார்கள் கோலிவுட்டில்.

Read Previous

‘சாலை’ படக்குழுவின் திக்..திக்..அனுபவம்

Read Next

Bruce Lee out of Pongal race