எங் மங் சங் – பாடலாசிரியரான பிரபுதேவா

வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரிப்பில் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் அம்ரீஷ் இசையமைப்பில் பிரபுதேவா, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘எங் மங் சங்’.

இப்படத்திற்காக பிரபுதேவா முதல் முறையாக எழுதிய பாடலான ‘அய்யனாரா வந்துட்டாங்க இங்க பாரு…’ என்ற பாடல் அம்ரீஷ் இசையில் பதிவானது.

சங்கர்மகாதேவன் குரலில் பதிவான இந்தப் பாடல் தற்போது கும்பகோணத்தில் 150 நடனக் கலைஞர்களுடன் பிரபுதேவா பங்கேற்க மிகப் பிரமாண்டமாக படமாக்கப்பட்டிருக்கிறது.

“பிரபுதேவா நடனம் என்றாலே பரபரப்பாக இருக்கும். அதிலும் 150 நடன கலைஞர்களுடன் அவர் ஆடும் போது ஊர் மக்கள் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். இந்தப் பிரமாண்டமான பாடல் காட்சி ஸ்ரீதர் நடன அமைப்பில் உருவாகி இருக்கிறது.

ஏராளமான துணை நடிகர், நடிகைகளும் பங்கேற்ற இந்தப் பாடல் காட்சி படத்தில் ஹைலைட்டாக இருக்கும்,” என்கிறார் இயக்குனர் அர்ஜுன்.

Read Previous

‘தொண்டன்’ பெண்களுக்குத் தைரியம் கொடுக்கும் படம் – சமுத்திரக்கனி

Read Next

சமுத்திரக்கனி நடிக்கும் ‘ஏமாலி’ ஆரம்பம்