அமைரா அழகை ரசித்த சந்தானம்

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் சார்பில் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் ஆகியோர், “ஒரு பக்கக் கதை, எங் மங் சங்” ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார்கள்.

அந்தப் படங்களுடன் சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படமும் தயாராகி வருகிறது.

நாயகியாக ‘அனேகன்’ படத்தில் நடித்த அமைரா தஸ்தூர் நடிக்க மற்றும் ரேணுகா, மன்சூரலிகான், நான் கடவுள் ராஜேந்திரன், பாலாஜி, பாஸ்கி, யோகிபாபு, மதுசூதனன் ராவ், மயில்சாமி, பஞ்சுசுப்பு, ராதாமணி ஆகியோருடன் இன்னும் பலரும் நடிக்கிறார்கள்.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தை திரைக்கதை, வசனம், எழுதி கே.எஸ்.மணிகண்டன் இயக்குகிறார். இவர் சந்தானம் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ வெற்றிப் படத்தின் இயக்குனர்.

‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது.

சமீபத்தில் அமேரா தஸ்தூர் ஜாலியாக ஆடிப் பாட, அந்த அழகை அழகை சந்தானம் மெய் மறந்து ரசித்த காட்சியை அசோக்ராஜா நடன அமைப்பில் படமாக்கினர்.

ஜாலியான ஒரு படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது ‘ஓடி ஓடி உழைக்கணும்’.

Read Previous

‘குங்ஃபு’ மாஸ்டராக பிரபுதேவா நடிக்கும் ‘எங் மங் சங்’

Read Next

ரஜினிகாந்த் பேச்சின் ‘குறியீடுகள்’ என்ன ?