‘குங்ஃபு’ மாஸ்டராக பிரபுதேவா நடிக்கும் ‘எங் மங் சங்’

வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன் ஆகியோர், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘ஒரு பக்கக் கதை’ படத்தைத் தயாரித்து வருகிறார்கள். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

அதைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘ஓடி ஓடி உழைக்கனும்’ படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த இரு படங்களுடன் பிரபுதேவா நாயகனாக நடிக்கும் ‘எங் மங் சங்’ படத்தையும் தயாரிக்கிறார்கள். ‘தேவி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபுதேவா நாயகனாக நடிக்கும் படம் இது. கதாநாயகியாக லட்மி மேனன் நடிக்கிறார்.

மற்றும் தங்கர்பச்சான், சித்ரா லட்சுமணன், கே.ராஜன், R.J. பாலாஜி, பாகுபலி பிரபாகர் (காலகேயா), கும்கி அஸ்வின், நாகேந்திர பிரசாத், முனீஸ் காந்த், காளி வெங்கட், மாரிமுத்து ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஆர்.பி.குருதேவ் ( இவர் காஞ்சனா 2, யோகி போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர்.

அம்ரீஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் எம்.எஸ். அர்ஜுன்.

பிரபுதேவா ஆரம்ப காலத்தில் டான்ஸ் மாஸ்டராகவும் வெற்றிக் கொடி நாட்டியவர். அதற்கு பிறகு நடிகராகவும், இயக்குனராகவும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார்.

டான்ஸ் மாஸ்டரான பிரபுதேவா, ஸ்டன்ட் மாஸ்டராக அதாவது குங்பூ சண்டை பயிற்சியாளராக நடிக்கும் படம் ‘எங் மங் சங்’.

முழுக்க முழுக்க காமெடி கலக்கல் படமான ‘எங் மங் சங்’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Read Previous

காதல் கதையாக உருவாகும் ‘96’

Read Next

அமைரா அழகை ரசித்த சந்தானம்

Most Popular