79 நாட்களில் படமான பிரம்மாண்ட ‘கௌதமி புத்ர சாதகர்ணி’

தெலுங்குத் திரையுலகின் அசத்தல் ஆக்ஷன் ஹீரோவான பாலகிருஷ்ணா நாயகனாக நடித்து வெளிவந்த ‘கௌதமி புத்ர சாதகர்ணி’ படம் அதே பெயரில் தமிழில் டப்பிங் ஆகி விரைவில் வெளியாக உள்ளது.

சிம்பு, அனுஷ்கா நடித்த ‘வானம்’ படத்தை இயக்கிய க்ரிஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

பாலகிருஷ்னாவின் 100 வது படமான இந்தப் படம் சுமார் 150 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

இந்த படத்தின் நாயகி ஸ்ரேயா. மற்றும் கபீர் பேடி, தணிகலபரணி, சுபலேகா சுதாகர் இவர்களுடன் இந்தி நடிகை ஹேமாமாலினி நீண்ட வருடங்களுக்குப் பிறகு நடித்திருக்கிறார்.

இந்தக் கதையை திரைப்படமாக உருவாக்க இயக்குனர் க்ரிஷ் கதையின் இயல்புத் தன்மை உண்மை குறையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய பிரதேசம், ஜார்ஜியா, மொராக்கோ போன்ற இடங்களுக்குச் சென்று உண்மையான அரண்மனைகளில் படமாக்கினார். அந்த காட்சிகளைத் திரையில் பார்பதற்கு பிரமாண்டமாக இருக்கும்.

ஆயிரக்கணக்கான குதிரைப்படைகளையும் , பல்லாயிரக்கணக்கில் காலாட்படையும் மற்றும் பல குறுநில மன்னர்கள், அரசவை சேனைகளும், தளபதிகள், மந்திரிகள் என்று எண்ணிலடங்கா வீரர்களையும் வைத்து உருவாக்கி உள்ள இந்த படத்தை பார்க்கும் போது நேரில் சென்று போர்க்களத்தை பார்ப்பது போல் இருக்கும்.

‘பாகுபலி’ படத்தைப் போன்ற பிரம்மாண்டமும், ஆங்கிலப் படத்திற்கு நிகரான பிரமிப்பும் கண்களை மிரட்டும் அதிநவீன கிராபிக்ஸும் கலந்த கலவை தான் இந்த ‘கெளதமி புத்ர சாதகர்ணி’ திரைப்படம்.

இப்படிப்பட்ட பிரம்மாண்டமான படத்தை 79 நாட்களில் படமாக்கி சாதனை புரிந்திருக்கிறார் இயக்குனர் க்ரிஷ்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பழம் பெரும் நடிகைகள் லதா, வெண்ணிற ஆடை நிர்மலா, இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் நரேந்திரா, தெலுங்குத் தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி, படத்தின் இயக்குனர் க்ரிஷ், தமிழில் வசனம் எழுதிய மருதபரணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்திரா இப்படத்தைத் தமிழில் வெளியிட உள்ளார்.

Read Previous

ஷிவானி ராஜசேகர், அடுத்த வாரிசு நடிகை

Read Next

Zee Tamil to launch a new serial ‘Rekka Katti Parakkudhu Manasu’

Most Popular