ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடித்த ‘பாகுபலி 2’ படம் ஏப்ரல் மாதம் 28ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது.
வெளியான நாளிலிருந்து தொடர்ந்து வசூல் சாதனை புரிந்த படம் 100 நாட்களைக் கடந்தும் பல தியேட்டர்களில் ஓடி 140 நாளையும் கடந்து சில தியேட்டர்களில் ‘ஷிப்டிங்’ முறையில் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதுவரை ‘பாகுபலி 2’ படம் புரிந்துள்ள வசூல் சாதனைகள் சில…
தமிழில் அதிகம் வசூலித்துள்ள படம், இதுவரை 150 கோடி
உலக அளவில் வசூலில் சாதனை புரிந்துள்ள படங்களில் இரண்டாவது இடம், முதல் இடத்தில் ‘தங்கல்’
ஹிந்தி மற்றும் தெலுங்குத் திரையுலகத்தில் வசூல் சாதனையில் முதல் இடம்
கேரளாவில் வசூல் சாதனையில் இரண்டாவது இடம்
இந்தியாவில் மட்டும் 1000 கோடி ரூபாயை வசூலித்த முதல் படம்
உலக அளவில் 1000 கோடி ரூபாய் வசூலைக் கடந்த முதல் இந்திய படம்….
இப்படி பல பெருமைகளை ‘பாகுபலி 2’ படம் பெற்றுள்ளது.
படத்தின் வசூல் விவரம்…
ஆந்திரா, தெலுங்கானா – 327 கோடி
தமிழ்நாடு – 152 கோடி
கர்நாடகா – 129 கோடி
கேரளா – 75 கோடி
வட இந்தியா – 720 கோடி
அமெரிக்கா – 138 கோடி
மற்ற நாடுகள் – 151 கோடி
கூடுதல் வசூல் – 25 கோடி
மொத்தம் – 1717 கோடி
தமிழில் மட்டும் சுமார் 78 கோடி பங்குத் தொகையாக கிடைத்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 203 கோடியும், கேரளா, கர்நாடகாவில் 100 கோடியும் வட இந்தியாவில் 282 கோடியும், அமெரிக்காவில் 87 கோடியும், பிற நாடுகளில் 82 கோடியும் பங்குத் தொகையாகக் கிடைத்துள்ளது. மொத்தத்தில் 832 கோடி பங்குத் தொகையாகக் கிடைத்து அனைவருக்கும் அதிகமான லாபத்தைக் கொடுத்த படமாக ‘பாகுபலி 2’ சாதனை புரிந்துள்ளது.