நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் என்பது திரையுலகத்தையும் தாண்டி ரசிகர்களிடமும் சென்றடைந்திருக்கிறது.
இருவரும் வழக்கம் போல அவர்கள்து காதலைப் பற்றி வெளியில் சொல்லிக் கொண்டதில்லை. இருந்தாலும் இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகவும் திரையுலகத்தில் கிசுகிசுக்கிறார்கள்.
‘நானும் ரௌடிதான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன், தற்போது சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் பட வாய்ப்பைக் கூட நயன்தாராதான் பெற்றுக் கொடுத்தார் என்றும் சொல்கிறார்கள்.
இந்தப் படத்தையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தையும் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். விக்னேஷ் சிவனுக்கு அடுத்து வாய்ப்பு கொடுத்தால்தான் உங்களது ஜோடியாக நடிப்பேன் என ‘வேலைக்காரன்’ படத்தில் நடிக்க நயன்தாரா கன்டிஷன் போட்டார் என்றும் திரையுலகத்தில் ஒரு பேச்சு உள்ளது.
தமிழ்த் திரையுலகத்தில் நம்பர் 1 நடிகையாக இருக்கும் நயன்தாரா, இன்று காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை அவருடன் அமெரிக்காவில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.