விஷால் படங்களில் அதிக வசூலில் ‘துப்பறிவாளன்’

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடித்து வெளிவந்துள்ள ‘துப்பறிவாளன்’ படம் கடந்த நான்கு நாட்களில் சுமார் 11 கோடி ரூபாயை தமிழ்நாட்டில் வசூலித்துள்ளது.

கேரளாவில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தாலும் அங்கும் படம் மக்களுக்குப் பிடித்துப் போய் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று செய்திகள் வருகின்றன.

‘பாண்டிய நாடு’ படத்திற்குப் பின் விஷால் நடித்து வெளிவந்த படங்கள் வசூல் ரீதியாக தோல்விப் படங்களாகவே அமைந்தன. அந்தத் தோல்வியை ‘துப்பறிவாளன்’ படம் மாற்றி எழுதியிருக்கிறது.

அதனால்தான், ‘துப்பறிவாளன்’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க உள்ளோம் என விஷால் அறிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் ‘துப்பறிவாளன்’ படத்தைப் பாராட்டி படத்திற்கு இன்னும் கூடுதலான புத்துணர்வைக் கொடுத்திருக்கிறார்.

“துப்பறிவாளன், மிஷ்கினின் தனித்துவமான பாணியுடன், உற்சாகமூட்டும் ஒரு த்ரில்லர். விஷாலின் கதாபாத்திரமும், அதில் அவருடைய நடிப்பும் அருமை, குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்” என ஷங்கர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

வசூல் ரீதியாக ‘துப்பறிவாளன்’ படம் நல்ல வெற்றியை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாக திரையுலகத்தினர் தெரிவிக்கிறார்கள்.

 

Read Previous

காதலரின் பிறந்த நாளை அமெரிக்காவில் கொண்டாடும் நயன்தாரா

Read Next

நடிகராக ஆசைப்பட்ட இசையமைப்பாளர் சிற்பியின் வாரிசு