விஜய் டிவியில் ‘எஸ் ஆர் நோ’ என்ற ஒரு புதிய நிகழ்ச்சி நாளை செப்டம்பர் 23ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது.
இந்த நிகழ்ச்சி ஒரு பிரமாண்டமான கேம் ஷோ. ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் 128 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள். அவர்கள் சொல்லும் ‘எஸ் ஆர் நோ’ என்ற பதில் பரிசுகளை அள்ளித் தரும்.
ஆச்சரியமூட்டும் திறமையைக் கொண்ட திறமைசாலிகள் மேடையில் ஒரு செயலை செய்து முடிப்பார்களா இல்லையா என்பதை போட்டியாளர்கள் கணித்து ‘எஸ் ஓர் நோ’ என்று சொல்லவேண்டும். அப்படி ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். போட்டியின் இறுதியில் இருக்கும் ஒரு நபருக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு மேலும் உற்சாகமூட்ட ஒவ்வொரு வாரமும், நான்கு நட்சத்திர போட்டியாளர்கள் கலந்து கொண்டு, போட்டியாளர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இப்படி விறுவிறுப்பாக செல்லப் போகும் இந்த நிகழ்ச்சியை ஜெகன் தொகுத்து வழங்ககிறார்.
முற்றிலும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு ‘கேம் ஷோ’-வாக இந்த நிகழ்ச்சியாக அமையும்.
ஒவ்வொரு வாரமும் சனிக் கிழமைகளில் இரவு 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.