தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு யு டியுபில் வெளியிடப்பட்டது.
வெளியான நான்கு மணி நேரத்திற்குள் 6 லட்சம் லைக்குகளைப் பெற்று உலக அளவில் குறுகிய நேரத்தில் அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் என்ற உலக சாதனையை மெர்சல் டீசர் நேற்று படைத்தது.
‘விவேகம்’ டீசர் அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் என்ற உலக சாதனையை கடந்த வாரம்தான் நிகழ்த்தியது. அவ்வளவு லைக்குகளைப் பெற அதற்கு 130 நாட்கள் தேவைப்பட்டது. அந்த 130 நாளில் கிடைத்த ‘விவேகம்’ டீசரின் உலக சாதனையை ‘மெர்சல்’ வெறும் நான்கு மணி நேரத்திற்குள் படைத்து ஆச்சரியப்பட வைத்தது.
சற்று முன் முடிந்த 24 மணி நேரத்தில் ‘மெர்சல்’ டீசர் 1 கோடியே 12 லட்சம் பார்வைகளையும், 7 லட்சத்து 28 ஆயிரம் லைக்குகளையும், 52 ஆயிரம் கமெண்ட்டுகளையும் பெற்றுள்ளது. 1 லட்சத்து 59 ஆயிரம் பேர் டிஸ்-லைக்கும் செய்துள்ளனர்.
உலக அளவில் தமிழ்த் திரைப்படங்களின் யு டியூப் சாதனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் ‘மெர்சல்’ டீசர் புரிந்துள்ள இந்த குறுகிய நேர சாதனை இந்தியத் திரையுலகம் மட்டுமல்ல ஹாலிவுட் திரையுலகமும் வியந்து பார்க்கும் ஒன்றாகவே இருக்கிறது.
‘மெர்சல்’ படம் வெளிவந்த பின்னும் இன்னும் பல புதிய சாதனைகளைப் படைக்கும் என்று இப்போது திரையுலக வட்டாரங்களில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.