7 சி-ஸ் என்டர்டெயின்மென்ட், அம்மே நாராயணா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்க, ஆறுமுக குமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.
இப்படத்தின் டீசர் நேற்று வெளியாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றங்களும், பரபரப்பான காட்சிகளும், இது எந்த மாதிரியான படம் எனத் தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர்.
29ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியான ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ டீசர் யு டியூப் டிரென்டிங்கில் 2வது இடத்திலும், 24 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும் கடந்துள்ளது.
கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது. படத்தை 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.