உலகமெங்கும் நமது தமிழ் நெஞ்சங்கள் பரவி உள்ளனர். அப்படிப்பட்ட தமிழ் நெஞ்சங்களை மகிழ்விக்கும் வகையில் சமீபத்தில் லண்டனில் விஜய் தொலைக்காட்சியின் ‘விஜய் ஸ்டார்ஸ் கொண்டாட்டம்’ நடைபெற்றது.
லண்டனில் மிகப் பிரபலமான எவன்டிம் அப்பல்லோவில் நடைபெற்ற அந்த மாபெரும் நட்சத்திரக் கொண்டாட்டம் வரும் பிப்ரவரி 18ம் தேதியன்று, ஞாயிறு மதியம் 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
சூப்பர் சிங்கர் நட்சத்திரங்கள் சௌந்தர்யா, ஸ்ரீனிவாஸ், திவாகர், மாளவிகா, பிரகதி மற்றும் சத்யா பிரகாஷ் ஆகியோரின் இசை விருந்தும் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளது.
‘ராஜா ராணி’ தொடரின் சஞ்சீவ், ஆலியா மானசா ஜோடி நடனத்தில் தேர்ந்தவர்கள் என்று அனைவருக்கும் தெரியும். அவர்கள் இந்த நிகழ்ச்சியில் மறுபடியும் பிரமாண்டமாக நடனமாடி அசத்தியுள்ளனர்.
பிக் பாஸ் குடும்பத்திலிருந்து ஹரிஷ் கல்யாண், ஆரவ் மற்றும் பிந்து மாதவி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அனைவரின் அசத்தல் நடனமும் நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது. முக்கியமாக டான்ஸ் மாஸ்டர் சாண்டியுடன் இணைந்து அவர்கள் ஆடும் நடனம் அனைவரையும் ரசிக்க வைக்கும். ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரக்ஷிதாவும் நிகழ்ச்சியில் நடனம் ஆடியுள்ளார்.
மா கா பா ஆனந்த் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு, விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.