‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்’ ஆகிய இரண்டு படங்களின் மிகப் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணி சேர்ந்துள்ள புதிய படத்திற்கு ‘சீம ராஜா’ எனப் பெயரிட்டுள்ளனர்.
சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான நேற்று பிப்ரவரி 17ம் தேதி ‘சீம ராஜா’ படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு, படத்தின் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்துள்ளனர்.
அதன்படி, ‘சீம ராஜா’ படம் வினாயக சதுர்த்தி நாளான செப்டம்பர் 13ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பாக ஆர்.டி. ராஜா தயாரிக்க, இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.