பிரிட்டிஷ் மில்லியனரைக் காதலிக்கும் எமி ஜாக்சன் ?

‘மதராச பட்டினம்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதன் பின் ஹிந்தி, தெலுங்கு ஆகியப் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது கன்னடத்திலும் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த் ஜோடியாக ‘2.0’ படத்தில் நடித்து முடித்துள்ள எமி ஜாக்சன், அவருடைய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மில்லியனர் ஜார்ஜ் பனயிட்டோவ் என்பவரைக் காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கனடா நாட்டு டிவிக்காக ஒரு தொடரில் நடித்து வரும் எமி ஜாக்சன் அங்கு அவருடைய காதலருடன் சுற்றுலா சென்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் ‘ ♥ ’ குறியுடன் அவர் பதிவு செய்திருப்பதால்தான் அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கிறது.

https://www.instagram.com/p/BfGwyQBFvQS/?taken-by=iamamyjackson

https://www.instagram.com/p/BfLsgQRlj-V/?taken-by=iamamyjackson

இது காதல்தானா அல்லது அவர் ஆண் தோழர் மட்டும்தானா என்பதை எமி ஜாக்சன் விளக்கமாகச் சொல்லும் வரை அவருடைய காதல் செய்தி சுற்றிக் கொண்டுதான் இருக்கும்.

Read Previous

சிவகார்த்திகேயனின் ‘சீம ராஜா’, வினாயகர் சதுர்த்தி வெளியீடு

Read Next

‘மெர்சல்’ – இதுவரை படைத்த சாதனைகள், பெற்ற விருதுகள்…

Most Popular