‘நரகாசூரன்’ விவகாரம், அரவிந்த்சாமியின் அசத்தல் டிவீட்

தமிழ் சினிமா உலகில் தற்போது நடந்து கொண்டிருக்கும் திரையுலக ஸ்டிரைக்கையும் மீறி, சீனியர் இயக்குனரான கௌதம் மேனன், இளம் இயக்குனரான கார்த்திக் நரேன் ஆகிய இருவருக்கும் இடையிலான டிவிட்டர் மோதல்தான் பரபரப்பாக இருந்து கொண்டிருக்கிறது.

‘நரகாசூரன்’ பட விவகாரத்தில் கார்த்திக் நரேன், தயாரிப்பாளராகக் கூட்டு சேர்ந்த கௌதம் மேனனால் பாதிக்கப்பட்டதைப் பற்றி மறைமுகமாகக் குறிப்பிட்டு டிவீட் செய்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று கௌதம் மேனன் டிவீட் செய்த போது, “சில இளம் படைப்பாளிகள் ஜோடியாக வளர்வதை விட்டுவிட்டு, அவர்கள் ஆர்வத்தை அவர்களே சிதைத்துக் கொள்கிறார்கள்”, எனப் பதிவிட்டிருந்தார்.

பதிலுக்கு கார்த்திக் நரேனும் கௌதம் டிவீட்டுக்கு பதிலளிக்க விவகாரம் இன்று விஸ்வரூபம் எடுத்தது. சமூக வலைத்தளங்களில் இன்று இதுதான் டிரென்டிங் ஆகவே இருந்தது.

தற்போது கார்த்திக் நரேனுக்கு ஆதரவாக அவருடைய ‘நரகாசூரன்’ பட நாயகனாக அரவிந்த்சாமி ஆதரவான டிவீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் கௌதமம் மேனனின் அந்த ‘ஜோடியாக’ என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டு அவர் அருமையான பதிலடியைக் கொடுத்திருக்கிறார். கௌதம் மேனன் ஸ்டைலிலேயே எந்தப் பெயரையும் குறிப்பிடாமல் அரவிந்த்சாமி டிவீட்டியுள்ளார்.

“ஆமாம், நாம் எல்லோரும் சில விஷயங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும், மற்றவர்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பார்க்க இரண்டு கண்கள், உண்மையைக் கேட்க இரண்டு காதுகள் வேண்டும்.

நம்மிடம் தவறு என்று கூற ஒரு மனசாட்சி மற்றும், எந்த இரண்டு நம் தவறுகளை ஒப்புக் கொண்டு, அதற்காக மன்னிப்பு கேட்க வைக்கிறதோ அதுவும் வேண்டும்.

மாறாக, காப்பாற்ற முடியாத பட்டியலை வளர்த்துக் கொள்கிறோம்,” என்பதுதான் அரவிந்த்சாமியின் டிவீட்.

அரவிந்த்சாமியின் டிவீட்டில் ஒரு ரசிகர் கௌதம் மேனனைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதுதான் சுவாரசியமான ஒரு டிவீட்..

“அச்சம் என்பது மடமையடா’ நான்கு வருட தாமதம், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இரண்டு வருடத் தாமதம், ‘துருவ நட்சத்திரம்’ இரண்டு வருடங்கள், ‘பொன் ஒன்று கண்டேன்’ கைவிடப்பட்டது, ‘நரகாசூரன்’…(மௌனம் எமோஜி), செல்வராவன் மீதாவது கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்” என அந்த ரசிகர் டிவீட் செய்திருக்கிறார்.

செல்வராகவன் இயக்கியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் கௌதம் மேனனும் ஒரு தயாரிப்பாளராக இருக்கிறார். அந்தப் படம் முடிவடைந்து ஒரு வருடமாகியும் இன்னும் வெளிவராமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த்சாமியின் ஆதரவு டிவீட் இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு ஒரு பெரிய ஆறுதலாக இருக்கும்.

 

 

Read Previous

சூர்யாவின் நண்பர், சம்பளம் தராத தயாரிப்பாளர் மோதல்

Read Next

இங்கிலாந்து நாட்டில் விருது வென்ற ‘மெர்சல்’