ஸ்ரீதேவிக்கு முதல் தேசிய விருது வாங்கித் தந்த ‘மாம்’

தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி என தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி.

அவர் நாயகியாக அறிமுகமான காலங்களிலேயே பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தவர். ஆனால், அப்போது அவருக்கு தேசிய விருதை யாரும் கொடுக்கவில்லை.

‘மூன்றாம் பிறை’ படத்தில் அவர் நடித்த போது சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைக்கும் என்றார்கள். ஆனால், கமல்ஹாசனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

சுமார் 300 படங்களில் நடித்து முடித்து மறைந்துவிட்ட ஸ்ரீதேவிக்கு முதல் முறையாக ‘மாம்’ படத்திற்காக தேசிய விருது அறிவித்திருக்கிறார்கள்.

ஸ்ரீதேவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேசிய விருது பற்றி அவரது கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.

“இவ்வளவு பெரிய மரியாதையைக் கொடுத்த இந்திய அரசாங்கத்திற்கும், விருது குழுவினருக்கும் நன்றி. தொடர்ந்து வாழ்த்துச் செய்தியை அனுப்பிக் கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எங்களது நன்றி,” என அவர்கள் கூறியுள்ளார்கள்.

Read Previous

தேசிய விருதுகள் பற்றி ஏஆர் ரகுமான் – வீடியோ

Read Next

தமிழ் புத்தாண்டு – ரஜினி, கமல் வாழ்த்து

Most Popular