நன்றி சகோதரா, சிவகார்த்திகேயனைப் பாராட்டிய தங்க மனிதன்

ஆஸ்திரேலியாவில் கோல்டுகோஸ்ட் நகரில் சமீபத்தில் நடந்து முடிந்த காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம், பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

சதீஷ்குமார் சிவலிங்கம் நேற்று நடிகர் சிவகார்த்திகேயனைச் சந்தித்தார். தங்கப் பதக்கம் வென்ற சதீஷ்குமாருக்கு பாராட்டு தெரிவித்து பரிசு ஒன்றை வழங்கினார் சிவகார்த்திகேயன்.

இது பற்றி சதீஷ்குமார் கூறியிருப்பதாவது, “ஒரு அற்புதமான மனிதரைச் சந்தித்தேன். காமென்வெல்த் தங்கப்பதக்கத்துடன் அவரைச் சந்தித்தது உண்மையில் நேசித்தேன். அவருடைய வார்த்தைகள் எனக்கு உண்மையில் மிகவும் ஊக்கமளித்தன. அவருடைய வாழ்க்கையில், கடின உழைப்பால் கொண்டாடப்பட வேண்டிய, ஆச்சரியப்பட வேண்டிய ஒரு நட்சத்திரம். உங்கள் அன்பான பரிசுக்கு மிக்க நன்றி சகோதரா,” என பாராட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Read Previous

ரஜினிகாந்த் பாராட்டிய ‘மெர்க்குரி’

Read Next

என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா – டீசர்

Most Popular