[post_gallery]
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் பிரபுதேவா, சனந்த், தீபக் பரமேஷ், சஷான்க் புருஷோத்தமன், அனிஷ் பத்மநாபன், இந்துஜா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘மெர்க்குரி’.
கடந்த வாரம் 20ம் தேதி வெளியான இப்படத்தை ரஜினிகாந்த் பார்த்து பாராட்டியிருக்கிறார். நேற்று ‘மெர்க்குரி’ படக்குழுவினர் ரஜினிகாந்தை அவருடைய வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அது பற்றி படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறியிருப்பதாவது,
“மிக்க மகிழ்ச்சி, தலைவர் ‘மெர்க்குரி’ பார்த்து, ரசித்தார். படக்குழுவினவரைச் சந்தித்து ஒவ்வொரு விஷயத்தையும் குறிப்பிட்டு பாராட்டினார். ‘சூப்பர் படம்’ என்று என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சொல்வதைக் கேட்க சிறப்பு, நன்றி தலைவா”, எனக் குறிப்பிட்டுள்ளார்.