S.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி , அஞ்சலி இணைந்து நடிக்கும் புதிய படம் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கப் பட உள்ளது.
லிங்கா இந்த படத்தில் மாறுபட்ட வில்லனாக நடிக்கிறார். விவேக் பிரசன்னாவும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
S.U.அருண்குமார் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணையும் மூன்றாவது படமான, இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தின் துவக்க விழா 21.04.2018 அன்று சென்னையில் நடைப்பெற்றது.
படப்பிடிப்பு தென்காசி மற்றும் மலேசியாவில் நடைபெற உள்ளது. இது ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது.