அடுத்த சில வாரங்களில் வெளியாக உள்ள படங்கள்

தமிழ்த் திரையுலகத்தில் மார்ச் மாதம் முழுவதும், ஏப்ரல் மாதத்தில் கடந்த வாரம் வரையிலும் புதிய படங்கள் வெளியாகவில்லை.

நேற்றுதான் ‘முந்தல், மெர்க்குரி’ ஆகிய படங்கள் வெளிவந்தன. இனி வரும் நாட்களில் படங்கள் எந்த தேதியில் சென்சார் ஆகியதோ அதைப் பொறுத்து படங்களின் வெளியீட்டை முறைப்படுத்துவோம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. அதன் அடிப்படையில் அதற்கான வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார்கள்.

தயாரிப்பாளர்களிடமிருந்து அவர்கள் படங்களை வெளியிடுவதற்கான மூன்று தேதிகளை தயாரிப்பாளர் சங்கம் கேட்டுள்ளது. அதில் ஒரு தேதியை சங்கமும், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் சங்கமும் பேசி இறுதி செய்ய உள்ளார்கள்.

இந்த முறைக்கு அனைத்துத் தயாரிப்பாளர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், பெரிய படங்கள் வரும் சமயத்தில் சிறிய படங்கள் வருவதற்கும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

வரும் வாரங்களில் வெளியாக உள்ள படங்களை இப்போதே முடிவு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இது போல அடுத்த வருடம் மார்ச் 30ம் தேதி வரைக்கும் வெளியாக உள்ள படங்களை முடிவு செய்யவும் திட்டமிட்டுள்ளார்கள்.

அடுத்த சில வாரங்களில் வெளியாக உள்ள படங்கள்….

பக்கா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், பாடம், தியா, இரவுக்கு ஆயிரம் கண்கள், மோகினி, டிக் டிக் டிக், கீ, கோலி சோடா 2, இரும்புத் திரை, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஒண்ணு போதும் நின்னு பேசும், செம போத ஆகாத, வல்லவனுக்கும் வல்லவன், காளி, கடைக்குட்டி சிங்கம், சர்வர் சுந்தரம், செம, ஆண்டனி, ஒரு குப்பைக் கதை, மிஸ்டர் சந்திரமௌலி, விஸ்வரூபம் 2, காலா.

Read Previous

மெர்க்குரி – விமர்சனம்

Read Next

விஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் புதிய படம்