ஜருகண்டி – ஜெய் கொடுத்த ஒத்துழைப்பு

நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் முதல் படம் ‘ஜருகண்டி’. இப்படத்திற்கு பிச்சுமணி இயக்குனராக அறிமுகமாகிறார்.

ஜெய் நாயகனாக நடிக்க, மலையாளத்தில் ‘ஜெகோபிண்டே சொர்க்க ராஜ்ஜியம்’ படத்தில் நடித்த ரெபா மோனிகா நாயகியாக நடிக்க, போபோ சசி இசை அமைத்துள்ளார்.

தன் முதல் பட அனுபவம் பற்றி நிதின் சத்யா கூறுகையில்,

“ஜெய்யின் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு,  முழு  படப்பிடிப்பிலும் இருந்தது. மற்ற நடிகர்கள்,  தொழில்நுட்பக் கலைஞர்களின் முழு ஒத்துழைப்பாலும்  ‘ஜருகண்டி’ படத்தை 46 நாட்களில் எடுக்க முடிந்தது.

திரைப்பட தயாரிப்பு முயற்சியில் என்னோடு இணைந்த பத்ரி கஸ்தூரிக்கும் நன்றி” என்றார்.

Read Previous

நடிகராக பாராட்டப்படும் ஸ்டன் சிவா

Read Next

‘பியார் பிரேமா காதல்’ – விரைவில் இசை வெளியீடு