யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் ‘ஹை ஆன் லவ், டோப்’ ஆகிய இரண்டு சிங்கிள்களும் வெளிவந்தவுடன், ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி படத்தின் இயக்குனர் இளன் தெரிவிக்கையில்,
“படத்தின் பாதி வெற்றி அதன் பாடல்களின் வெற்றியில் உள்ளது என்பது எழுதப்பட்ட, நிரூபணமான ஒரு விதி.
‘பியார் பிரேமா காதல்’ படத்திற்கு ஈர்ப்பு அதிகமாகி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக ‘டோப்’ பாடல் இசை ரசிகர்களின் நரம்புகளுக்குள் புது எனர்ஜியை பாய்ச்சியுள்ளது.
படத்தின் முழு ஆல்பத்தையும் ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம் ,” என்கிறார்.
‘பியார் பிரேமா காதல்’ படத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.
கே ப்ரொடக்ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோரோடு இணைந்து ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கும் இப்படத்தை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.