மசாலா பிக்ஸ் சார்பில் கண்ணன் தயாரித்து இயக்க அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பூமராங்’.
பாலிவுட் நடிகர் உபென் படேல் வில்லனாகவும், ஆர்.ஜே. பாலாஜி காமெடியனாகவும், நடிகர் சதீஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.
நாயகி மேகா ஆகாஷ் இந்தப் படத்திற்காக சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார்.
இது பற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது,
“மேகா ஆகாஷ் சொந்தக் குரலில் டப்பிங் செய்தது எங்களுக்கு நிறைவாக அமைந்தது. ஏராளமான திறமையாளர்களின் சங்கமம் ஆக இந்த ‘பூமராங்’ நிச்சயம் பேசப்படும்,” என்கிறார் இயக்குனர் கண்ணன்.