ஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’

நடிகை ஸ்ருதிஹாசன் அவரது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ என்ற படத்தைத் தயாரித்து வெளியிடுகிறார். இதனை ‘லென்ஸ்’ பட இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.

இப் படத்தைப் பற்றி இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் பேசும் போது,

நான்கு நண்பர்களின் கதையின் மூலம், இந்த சமூகம் எப்படி பழங்கால மரபுகளின் வீழ்ச்சியையும், நவீனத்தின் எழுச்சியையும் எதிர் கொள்கிறது என்பதை தங்களுக்குள்ளேயே ஒரு விசாரணையின் மூலம் விவாதித்துக் கொள்கிறது.

இப்படம் உலக சினிமாவின் மொழியில், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் ” என்கிறார்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளரான, நடிகை ஸ்ருதிஹாசன் கூறும் போது,

எளிய கதைகளை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தும் இயக்குநரின் பார்வையைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். அவருடன் தொழில் முறையிலான உறவு நீடிக்கும் என்றும் நம்புகிறேன்,’ என்றார்.

Read Previous

‘பூமராங்’ – சொந்தக் குரலில் பேசும் மேகா ஆகாஷ்

Read Next

ஆர்கே நகர் பிரேம்ஜிக்கு அங்கீகாரம் பெற்றுத் தரும் – இயக்குனர் சரவணராஜன்