வி. ராஜலட்சுமி, ஷ்ரத்தா எண்டர்டெயின்மெண்ட் பத்ரி கஸ்தூரிடன் இணைந்து, பிளாக் டிக்கெட் கம்பெனிய்ன் சார்பில் ‘ஆர்.கே.நகர் ‘ படத்தை தயாரிக்கிறார்.
‘ஆர்.கே.நகர் ‘ படத்தில், பிரேம்ஜி இசையமைப்பில் இடம் பெற்றுள்ள ‘பப்பர மிட்டாய்’ பாடல் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சனா லோகன் எழுதியுள்ள எளிமையான வரிகளும், கானா குணா பாடியுள்ள விதமும் பாடலை வெற்றிப் பாடலாக மாற்றியிருக்கிறது.
‘வடகறி’ படத்தை இயக்கியுள்ள சரவணராஜன், இயக்கியுள்ள இந்தப் படத்தில் வைபவ், சனா அல்தாஃப் மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, அஞ்சனா கீர்த்தி, சந்தானபாரதி, சுப்பு பஞ்சு, இனிகோ பிரபாகரன், கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், டி.சிவா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பிரேம்ஜி பற்றி படத்தின் இயக்குனர் சரவணராஜன் கூறுகையில்,
“பிரேம்ஜி இசைத் திறமை மிகுந்த ஒரு கலைஞர்.பின்னணி இசை கோர்ப்பில் மிகச் சிறந்தவர். அவருக்கு ஒரு இசையமைப்பாளராகக் கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை ஆர்கே நகர் நிச்சயம் பெற்றுத் தரும் என்று நம்புகிறேன். அவருடைய வெளித்தோற்றத்துக்கு மாறாக,அவர் ஒரு மிகச் சிறந்த இசையமைப்பாளராக உள்ளார்,” என்கிறார்.