’ராஜா ராணி, நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடர்களின் மெகா வாரம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களான ‘ராஜா ராணி, நாம் இருவர் நமக்கு இருவர்’ ஆகிய தொடர்கள் செப்டம்பர் 10 முதல் 14ம் தேதி வரை மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கு முன்பு ‘அவளும் நானும், பொன்மகள் வந்தாள்’ ஆகிய தொடர்கள் அப்படி ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே போல இப்போது ‘ராஜா ராணி, நாம் இருவர் நமக்கு இருவர்’ ஆகிய தொடர்கள் இணைந்து ஒரு மெகா வாரமாக ஒளிபரப்பாக உள்ளது.

‘ராஜா ராணி’ தொடரில் கார்த்திக், செம்பா ஆகியோர் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடரின் தேவி மற்றும் மாயனை சந்திக்கப் போகிறார்கள்.

கார்த்திக்கின் தங்கை வினோதியின் மாப்பிள்ளையைப் பற்றித் தெரிந்து கொள்ள கார்த்திக், செம்பா ஆகியோர் மாயன் கிராமத்திற்குச் செல்கிறார்கள்.

அதனால் நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள் இந்த மெகா வாரத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

Read Previous

சீமராஜா – மச்சக்கன்னி….பாடல் வீடியோ

Read Next

கை மாறிய ‘வண்டி’