கை மாறிய ‘வண்டி’

ரூபி பிலிம்ஸ் என்னும் புதிய பட நிறுவனத்தின் சார்பில் ஹஷீர் தயாரிப்பில், புதிய இயக்குநர் ரஜீஸ் பாலா இயக்கத்தில் விதார்த், சாந்தினி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வண்டி’.

இப்படத்தின் தமிழ் நாடு திரை அரங்கு உரிமையை எஸ் போகஸ் சார்பில் பிரபல வினியோகஸ்தரும், தயாரிப்பாளருமான எம் சரவணன் பெற்றுள்ளார்.

‘சென்னை 28 பாகம் 2, பவர் பாண்டி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வினியோகித்த இவர் தற்போது, ஜிவி பிரகாஷ், பார்த்திபன் நடிப்பில் உருவாகி வரும் ‘குப்பத்து ராஜா’ படத்தைத் தயாரித்து வருகிறார்.

வண்டி படத்தை வெளியிடுவது பற்றி சரவணன் கூறியதாவது,

“தரமான படங்களைத் தொடர்ந்து வெளியிடுவதுதான் என் நிறுவனத்தின் பிரதான நோக்கம். ‘வண்டி’ படத்தின் விநியோக உரிமையைப் பெற்று , படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் மும்முரமாக உள்ளேன். ஒரு தரமான படத்துக்கு உற்ற துணையாக பிரமோஷன் மற்றும் மார்க்கெட்டிங் அமைந்து விட்டால் அந்த படத்தின் வெற்றிக்கு யாரும் தடை விதிக்க முடியாது. அந்த வகையில் சிறந்த கதை அமைப்பு, காட்சி அமைப்பு, எங்களது நிறுவனத்தின் விளம்பரம் ஆகிய அனைத்தையும் கொண்ட ‘வண்டி’ வெற்றிப் பாதையில் பயணிக்கும் என உறுதியாகக் கூறுகிறேன்,” என்கிறார் சரவணன்.

Read Previous

’ராஜா ராணி, நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடர்களின் மெகா வாரம்

Read Next

விதார்த் நடிக்கும் ‘வண்டி’ டிரைலர்