செல்பி விவகாரம், கார்த்தியின் கண்டிப்பு, கஸ்தூரி சமாளிப்பு

பிரபலங்களின் அனுமதி இல்லாமல் செல்போனில் செல்பி எடுப்பது சரியா, தவறா என்ற சர்ச்சை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. அதிலும் சினிமா பிரபலங்களை அவர்களிடம் கேட்காமல், அவர்கள் நடக்கும் போது கூட பக்கத்தில் போய் செல்பி எடுக்கும் ரசிகர்கள் நிறையவே இருக்கிறார்கள்.

தன்னிடம் செல்பி எடுக்க வந்தவர்களின் போனைத் தட்டிவிட்ட நடிகர் சிவகுமார் பற்றி சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் எழுந்தது.

இன்று சிவகுமாரின் மகன் கார்த்தி கலந்து கொண்ட ‘ஜுலை காற்றில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் செல்பி விவகாரம் மீண்டும் ஒரு சர்ச்சையானது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடிகை கஸ்தூரி தொகுத்து வழங்கினார். விழாவில் நடிகர் கார்த்தி, இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கார்த்தியைப் பேச அழைக்கும் போது, ஒரு நிமிடம் கார்த்தி என்று சொல்லிவிட்டு, உடனே அவருடன் கஸ்தூரி செல்பி எடுக்க முயன்றார். கூடவே, உங்க அப்பா இங்க இல்லை இல்லையா அதான் ஒரு செல்பி எனக் கிண்டலாகவும் பேசினார்.

கஸ்தூரியின் அந்தச் செயலால் கோபமடைந்த கார்த்தி, “தேவை இல்லாத ஒரு விஷயமா இருக்கு.  செல்பி எடுப்பதற்கு ஒரு மரியாதையே இல்லாமல் போய்விட்டது. கேட்டு போட்டோ எடுக்கணும்கறது கிடையாது. மூஞ்சிக்கு முன்னாடி வந்து நிக்கிறது. முன்னாடி ஒரு பிளாஷ், பின்னாடி ஒரு பிளாஷ். அவ்வளவு பிளாஷ், கண்ல பட்டால் மைக்ரைன் இருக்கிறவங்களுக்குப் என்ன ஆகும். ஒரு விவஸ்தையே கிடையாதுன்னு நினைக்கிறேன், வருத்தமா இருக்கு. இப்ப சொன்னால்தான் உண்டு,” என்று கஸ்தூரியைக் கண்டித்தார்.

கஸ்தூரியிடம் கார்த்தி காண்பித்த கடுமை, கண்டிப்பு உடனடியாக டிவி, இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் செய்தியாகப் பதிவானது.

தனது செயலுக்கு இப்படி ஒரு கண்டனம் வந்ததையடுத்து அதைச் சமாளிக்கும் விதமாக கஸ்தூரி, அது படத்தைப் பற்றி வைரலாகப் பேச வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு செய்யப்பட்டது என்றார்.

‘கார்த்தி அவருடைய அப்பா சிவகுமாரைப் பற்றி இப்படித்தான் திட்டமிட்டு கிண்டலாகப் பேசச் சொன்னாரா,” என ரசிகர்கள் அதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

கஸ்தூரியின் செயலை உடனடியாக கார்த்தி கண்டித்ததற்கு ரசிகர்கள் அவருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்கள்.

Read Previous

அஜித் நடிக்கும் ‘நேர் கொண்ட பார்வை’

Read Next

44 வீரர்களுக்கு ‘ஜுலை காற்றில்’ குழு தலா ஒரு லட்சம் உதவி