பேவியூ பிராஜக்ட்ஸ் எல்எல்பி, ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித்குமார் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘நேர் கொண்ட பார்வை’ என்ற தலைப்பு வைத்து படத்தின் முதல் பார்வை போஸ்டரையும் இன்று வெளியிட்டுள்ளார்கள்.
நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படம் 2016ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த ‘பின்க்’ படத்தின் ரீமேக் ஆகும்.
அந்தப் படத்தில் அமிதாப்பச்சன் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் அஜித்குமார் நடிக்கிறார்.
இன்று வெளியான ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் முதல் போஸ்டர், அப்படியே ‘பின்க்’ பட போஸ்டர் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலத் தயாரிப்பாக உருவாக உள்ள இந்தப் படத்தை மே 1ம் தேதி அஜித் பிறந்த நாளில் வெளியிடுவார்களா என்ற எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்களிடம் உள்ளது.