தமிழ் சினிமாவில் தங்கள் பெயர்களுக்கு முன் பட்டப் பெயர்கள் இல்லாத நடிகர்களைப் பார்க்கவே முடியாது.
மக்கள் திலகம், நடிகர் திலகம், இலட்சிய நடிகர், மக்கள் கலைஞர், சூப்பர் ஸ்டார், உலக நாயகன், புரட்சிக் கலைஞர், புரட்சித் தமிழன், நவரச நாயகன், மக்கள் நாயகன், இளையதளபதி, அல்டிமேட் ஸ்டார், சின்ன தளபதி, புரட்சித் தளபதி என வந்து சமீபத்தில் விஜய் சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’ என்பது வரை வந்திருக்கிறது.
மேலே குறிப்பிட்ட பட்டங்கள் அனைத்தும் நடிகர்களுக்கான பட்டங்கள்.
ஆனால், நடிகைகளுக்கு அதிகமாகப் பட்டங்கள் கொடுக்க மாட்டார்கள். இருந்தாலும் சிலர் சில பட்டங்களுடன் அழைக்கப்படுகிறார்கள்.
கன்னடத்துப் பைங்கிளி, புன்னகை அரசி, புன்னகை இளவரசி என சிலருக்கு மட்டும் பட்டங்களைச் சூடி மகிழ்ந்தார்கள்.
அந்த வரிசையில் தற்போது நடிகை வரலட்சுமிக்கு ‘மக்கள் செல்வி’ என்ற பட்டத்தை வழங்கியிருக்கிறார்கள்.
இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவர் நாயகியாக நடிக்கும் ‘டேனி’ படத்தின் முதல் பார்வையில் ‘மக்கள் செல்வி’ என்ற பட்டத்துடன் விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள்.