விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் சந்தர் இயக்கத்தில், விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் ஆரம்பமானது.
நாயகிகளான ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் முதன் முதலாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள்.
சூரி, நாசர் , அசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீமன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
விவேக் மெர்வின் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.
விஜய் நடிப்பில் வெளிவந்த ‘பைரவா’ படத்திற்குப் பிறகு பழம் பெரும் நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.