இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்

‘அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா’ படங்களை இயக்கிய பா ரஞ்சித், ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார்.

கடந்த ஆண்டு வெளிவந்த அந்தப் படம் பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்றது. பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டது.

அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது, அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்கும் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.

அதற்கடுத்து மேலும் ஒரு புதிய படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தை பத்ரி கஸ்தூரியின் ஷ்ரதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

பா. ரஞ்சித்திடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய சுரேஷ் மாரி இந்தப் படத்தை இயக்குகிறார்.

கலையரசன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. படத்தின் முதல் கட்டப் பணிகள் இன்று ஆரம்பமாகின.

Read Previous

100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை

Read Next

வெள்ளைப் பூக்கள் – விமர்சனம்

Most Popular