தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் பலர் நடித்து 2015ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி வெளிவந்த படம் ‘நானும் ரௌடிதான்’.
இன்று படத்தின் நான்கு ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு படத்தின் நாயகி நயன்தாராவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
“தங்கமே, உன்னை சந்தித்த பிறகுதான் இனிமையான நினைவுகளுடன் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன். இந்த நாளுக்காக மிக்க நன்றி.
இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்ததற்கு நன்றி. அதுதான் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை வாழும் சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளது.
உள்ளும், வெளியும் அற்புதமான நபராக எப்போதும் இருக்க கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்.
நிறைய அன்புகளோடு…..,” என விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஆனால், டிவிட்டரில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷை விக்னேஷ் சிவன் ‘டேக்’ செய்யாமல் விட்டதற்கு தனுஷ் ரசிகர்கள் கடுமையான கமெண்ட்டுகளைப் பதிவிட்டனர்.
இன்ஸ்டாகிராமில் விஜய் சேதுபதி, நயன்தாராவைத் தவிர வேறு யாருக்கும் அவர் நன்றி சொல்லவில்லை.
https://www.instagram.com/p/B34SaIvBYgD/
https://www.instagram.com/p/B34Wq7Ah43q/
https://twitter.com/VigneshShivN/status/1186187111810191362