தந்தைக்குக் கிடைத்த பெருமை – விக்ரம் நெகிழ்ச்சி

இ 4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கிரிசாயா இயக்கத்தில், ரதன் இசையமமப்பில், த்ருவ் விக்ரம், பனிதா சாந்து மற்றும் பலர் நடித்த படம் ‘ஆதித்ய வர்மா’.

இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இளம் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.

அதில் படத்தின் இயக்குனர் கிரிசாயா, இசையமைப்பாளர் ரதன், த்ருவ் விக்ரம், அன்புதாசான், தனுஷ், வினியோகஸ்தர் சக்திவேலன் ஆகியோருடன் நாயகன் த்ருவ் விக்ரம் அப்பா விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் நடிகர் த்ருவ் விக்ரம் பேசியதாவது,

“படத்திற்கான ரெஸ்பான்ஸைப் பத்தி கேள்விப்படும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதற்காகத்தான் இரண்டு வருடம் காத்திருந்தோம் என்பதை நினைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. என் கலை மாமா கதிர்மாமா அவர்களுக்கு பெரிய நன்றி. என்னை சின்னப்பிள்ளையில் இருந்தே அவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

இசை அமைப்பாளர் உழைப்பு மிகப்பெரியது. கிரிசாயா சார் வெரி ஹார்ட் ஒர்க்கர். தனுஷ் முன்னாடி எப்படி நடிக்கிறது என்ற பயம் எனக்கு இருந்தது. ஏன் என்றால் அவன் பாலிலிவுட்ல கேமரா வொர்க் பண்ணவன். சவுரியா நல்ல உழைப்பாளி. என் அப்பா என் ஜிம் ட்ரைனரிடம் கூட படத்தைக் காட்டுவார். ஆனால் என்னிடம் காட்ட மாட்டார். எல்லாவற்றையும் எனக்கு சர்ப்ரைஸாக செய்வார். அன்புதாசன் படத்தோட ஸ்ட்ராங் கேரக்டர். அவன் ரொம்ப நல்லா நடிச்சிருக்கான்.

அப்பாவும் இந்தப் படத்தில் டயலாக் எழுதி இருக்கிறார். உதவி இயக்குநர்கள் கொடுக்குற எபெக்ட் தான் படமே. அவர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் படத்தில் உழைத்த அத்தனை டெக்னிஷியன்களுக்கும் நன்றி. நான் நல்லா நடித்த காட்சிகளில் எல்லாம் என் அப்பா இருப்பார். நான் சுமாராக நடித்த காட்சிகளில் தான் நான் இருப்பேன்.

நான் பிறந்ததில் இருந்தே எனக்கு சினிமான்னா பிடிக்கும். அதைப்போல் எனக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்கும். இந்த இடத்தில் நான் நிக்கிறது, நான் நடிக்கிறது எல்லாமே என் அப்பா தான். இந்த வெற்றிக்கான க்ரடிட் எல்லாமே என் அப்பாவிற்குத்தான் சேரும். இந்த வயதில் எனக்கு கிடைத்த வாய்ப்பு என் அப்பாவிற்குக் கிடைத்திருந்தால் அவர் வேற லெவல்ல இருந்திருப்பார். தயாரிப்பாளர் முகேஷ் சார் இப்படியொரு வாய்ப்பைத் தந்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி,” என்றார்

நடிகர் விக்ரம் பேசுகையில்,

“ஒரு தந்தைக்கு இதைவிட பெருமை இருக்க முடியாது. ஊடகங்கள் மொத்தமும் துருவை கொண்டாடியதற்கு ரொம்ப நன்றி. நான் பேச வேண்டியதை எல்லாம் துருவ் பேசிவிட்டார். இந்தப் படத்தில் ஐந்து முக்கியமான விசயங்கள் இருக்கு. இப்படத்தின் மூலக்கதாசிரியர் சந்திப்பிற்கு முதல் நன்றி.

த்ருவின் டப்ஸ்மாஷ் பார்த்துவிட்டு இவனால் நடிக்க முடியும் என்று நம்பி என் வீட்டிற்கு வந்த தயாரிப்பாளர் முகேஷ் சாருக்கு நன்றி. இந்தப் படத்தை த்ருவால் நல்லா பண்ண முடியும்னு கான்பிடன்ட் இருந்தது. ரவி.கே சந்திரன் அவர்களுக்கும் நன்றி. அவர் ஒளிப்பதிவாளராக வந்ததால் படத்திற்குப் பெரிய பலம் கிடைத்தது.

அன்புதாசன் இந்தப்படத்தோட இன்னொரு பலம். அவனை நான் அதிகமாக டார்ச்சர் பண்ணேன். அது நல்ல கேரக்டர். அவனும் சிறப்பாக நடித்திருந்தான். துருவை அடிக்கும் காட்சியில் திணறினான். பின் சரியாக செய்துவிட்டான். அன்புதாசன் பேசுற டயலாக்ஸ் எல்லாம் மாரி வினோத் எழுதியது. அவருக்கும் நன்றி.

ராஜசேகர் நேர்த்தியான வசனங்கள் எழுதினார். நான் கொஞ்சம் சப்போர்ட் பண்ணேன். மேலும் என் ரசிகர்களுக்கு பெரிய நன்றி. என் படம் அளவிற்கான எல்லா ரெஸ்பான்ஸையும் என் மகனுக்கும் கொடுத்திருந்தார்கள். அது ரொம்ப பெரிய விசயம்.

இந்தப்படம் கிரியாசா இயக்கா விட்டால் இப்படி வந்திருக்காது. நான் கேட்ட எல்லா விசயங்களையும் செய்து தந்தார் தயாரிப்பாளர் முகேஷ் சார். இசை அமைப்பாளர் ரதனிடம் நீ பெரிய இசை அமைப்பாளராக வருவே என்று நான் சொன்னேன். அது நடக்கும்,” என்றார்

இயக்குநர் கிரிசாயா பேசியதாவது,

“தமிழ் ரசிகர்களுக்குப் பெரிய நன்றி. படத்திற்கு ஆடியன்ஸிடம் செமயான ரெஸ்பான்ஸ் இருக்கு. விக்ரம் சார் இந்தப் படத்திற்காக முழுமையாக உழைத்துள்ளார். அவர் இல்லை என்றால் இப்படம் இல்லை. த்ருவ் மிகச்சிறந்த நடிகர். நவம்பர் 22-ஆம் தேதி ஒரு புது ஸ்டார் பிறந்திருக்கிறார். அதுதான் துருவ்,” என்றார்.

Read Previous

ஆதித்ய வர்மா – விமர்சனம்

Read Next

பெமீனா வழங்கிய சூப்பர் டாட்டர் விருதுகள் 2019

Most Popular