சத்தமின்றி தொடங்கப்பட்ட ராஜுமுருகனின் அடுத்த படம்

எந்தவித சத்தமின்றி தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பினை தொடங்கிவிட்டார் ராஜுமுருகன்.

ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி, சுனில், விஜய் மில்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜப்பான்’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் கார்த்தியின் 25-ம் படமாகும். மேலும், இது படுதோல்வியை தழுவியது மட்டுமன்றி கடும் கிண்டலுக்கும் ஆளானது.

இந்தப் படத்திற்குப் பிறகு வேறு எந்தவொரு புதிய படத்தினையும் ட்ரீம் வாரியர் நிறுவனம் தொடங்கவில்லை. இதனிடையே, தனது அடுத்த படத்துக்கான கதையினை எழுதிவந்தார் ராஜுமுருகன். இதனை பல்வேறு நாயகர்களிடம் தெரிவித்துவந்தார். இறுதியில் சசிகுமார் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

ஓலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சத்தமின்றி தொடங்கப்பட்டுள்ளது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படத்தினை முடிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. இதற்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் ஆகியோருடன் பணிபுரிந்து வருகிறார் ராஜுமுருகன்

Read Previous

வரவேற்பைக் குவிக்கும் ககனச்சாரி

Read Next

சிக்கலில் ‘ப்ளடி பெக்கர்’: வெளியீடு ஒத்திவைப்பு

Most Popular