தனது அடுத்த படத்துக்கு சம்பளமாக 55 கோடி கேட்டுள்ளார் தனுஷ்.

சேகர் கமுல்லா இயக்கத்தில் உருவாகி வரும் ‘குபேரா’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இவருடைய நடிப்பில் ‘ராயன்’ வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. மேலும், தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படமும் தயாராகி வருகிறது. இந்தப் படங்களின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

தனுஷ் – விக்னேஷ் ராஜன் இணையும் படத்துக்கு தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இறுதியாக, இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. இன்னும் ஒப்பந்தமாக கையெழுத்தாகவில்லை.

இந்தப் படத்துக்காக 55 கோடி ரூபாய் சம்பளமாக பெறவுள்ளார் தனுஷ். இது அவருடைய திரையுலக பயணத்தில் வெறும் நடிப்பிற்கு மட்டும் வாங்கும் அதிக சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், விக்னேஷ் ராஜன் கூறிய கதையினை கேட்டு உடனடியாக தனுஷ் தேதிகள் ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் “தி இந்தியா ஹவுஸ்”

Read Next

அட்லி இயக்கத்தில் கமல்ஹாசன் – சல்மான்கான்

Most Popular