தனது நண்பன் பாரதிராஜாவுக்காக மதுரையில் பிரம்மாண்ட விழா ஒன்றினை எடுக்கவுள்ளார் இளையராஜா.
தமிழ் திரையுலகில் நீண்ட வருடங்களாக நெருங்கிய நண்பர்களாக வலம் வருபவர்கள் இளையராஜா – பாரதிராஜா. சில ஆண்டுகளாக பேசாமல் இருந்தவர்கள், மீண்டும் தங்களுடைய நட்பினை புதிப்பித்துக் கொண்டார்கள். தற்போது இருவருமே தினமும் தொலைபேசி வாயிலாக உரையாடி மகிழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், தனது நண்பன் பாரதிராஜாவுக்காக மதுரையில் பிரம்மாண்ட விழா ஒன்றிற்கு திட்டமிட்டு வருகிறார் இளையராஜா. இதற்காக அவரே முன்னின்று பாரதிராஜாவிடம் பணிபுரிந்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதுவரை பேசிய நடிகர்கள் அனைவருமே தேதி முடிவானவுடன் சொல்லுங்கள், கண்டிப்பாக வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். அனைத்தையும் திட்டமிட்டுவிட்டு முறையா அறிவிக்க காத்திருக்கிறார்கள்.
இந்த விழாவுக்கு பாடலாசிரியர் வைரமுத்துவை இளையராஜா அழைப்பாரா என்பது தான் திரையுலகினர் எதிர்பார்ப்பு.