சரவணன் இயக்கத்தில் அதே கூட்டணியில் உருவாகிறது ‘மரகதநாணயம் 2’.
2017-ம் ஆண்டு ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மரகதநாணயம்’. இந்தப் படத்தின் மூலம் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்குநராக அறிமுகமானார். ஆக்சிஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பினைப் பெற்றது.
பல்வேறு முன்னணி நடிகர்களிடம் இரண்டாவது படத்திற்கு பேசினார். ஆனால், இறுதியாக ‘வீரன்’ படத்தினை இயக்கினார். இந்தப் படம் எதிர்பார்த்த கதையினை கையில் எடுத்துள்ளார் ஏ.ஆர்.கே.சரவணன். இதனை ஆக்சிஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. யார் நாயகன் என்பது எல்லாம் தெரிவிக்காமல், இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு சிறு அறிவிப்பினை மட்டுமே வெளியிட்டு இருந்தார்.
இது தொடர்பாக விசாரித்த போது, ‘மரகதநாணயம்’ படக்குழுவினர் அனைவருமே 2-ம் பாகத்திலும் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் படத்தின் பூஜையினை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளனர். முதல் பாகத்தினை விட அதிக பொருட்செலவில் 2-ம் பாகத்தினை உருவாக்கவுள்ளனர்.