‘சலார் 2’ படத்தில் கைரா அத்வானி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ப்ரித்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘சலார்’. ஹோம்பாளே நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் போதிய வரவேற்பினை பெறவில்லை. மேலும், இதன் முதல் பாகம் மட்டுமே வெளியாகியுள்ளது. 2-ம் பாகம் எப்போது தயாரிப்பு ஆரம்பமாகும் என்பது இன்னும் முடிவாகவில்லை.
அதற்குள் ‘சலார் 2’ படத்தில் கைரா அத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் பரவியுள்ளது. மேலும், படத்தின் முதற்கட்ட தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இது தொடர்பாக விசாரித்த போது, ‘சலார் 2’ படத்தில் கைரா அத்வானி நடிக்கவில்லை. அவரிடம் பேச்சுவார்த்தை கூட நடைபெறவில்லை. ஆகையால் அதில் உண்மையில்லை. ஆனால், ‘சலார் 2’ படத்தின் தயாரிப்பு பணிகள் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது.
இந்தாண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கப்படும். ஏற்கனவே 2-ம் பாகத்தின் சில காட்சிகள் இருப்பதால், என்னவெல்லாம் காட்சிப்படுத்த வேண்டியதுள்ளது என்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது
‘சலார் 2’ படத்தினை முடித்துவிட்டு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல். இதில் நாயகனாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளார்.