மீண்டும் காதலரை பிரிந்துள்ளார் ஸ்ருதிஹாசன். அவருடைய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார்.
இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். முதலில் லண்டன் வாழ் நடிகரான மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்து வந்தார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார்.
மீண்டும் மும்பையைச் சேர்ந்த சாந்தனு ஹஸாரிகா என்பவரை காதலித்து வந்தார். அவருடன் மும்பையில் தனியாக வாழ்ந்தும் வந்தார். இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பதிவிலும் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், தற்போது சாந்தனு ஹஸாரிகாவையும் பிரிந்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். அவர் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பதிவிலிருந்து நீக்கியிருக்கிறார் ஸ்ருதிஹாசன். இதற்கு காரணம் சமீபத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநருடன் ஏற்பட்ட நெருக்கம் தான் காரணம் என்கிறார்கள்.