‘தக் லைஃப்’ படத்தில் தேதிகள் பிரச்சினை காரணமாக ஜெயம் ரவியும் விலகியிருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தினை தயாரித்து வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவுற்றது.
இதனிடையே, தேதிகள் பிரச்சினையால் இந்தப் படத்திலிருந்து முதலில் விலகினார் துல்கர் சல்மான். அவருடைய கதாபாத்திரத்தில் சிம்புவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
தற்போது துல்கர் சல்மானைத் தொடர்ந்து ஜெயம் ரவியும் தேதிகள் பிரச்சினையால் விலகியிருக்கிறார். ஏனென்றால் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு திட்டமிட்டவாறு நடைபெறவில்லை. மேலும், நாயகனாக நடிக்க சில படங்கள் இருப்பதால், ‘தக் லைஃப்’ படத்திலிருந்து விலகும் முடிவினை எடுத்துள்ளார் ஜெயம் ரவி. அவருடைய கதாபாத்திரத்தில் வேறு யார் நடிக்கவுள்ளார் என்பது விரைவில் தெரியவரும்.
செர்பியா நாட்டிற்கு படப்பிடிப்புக்கு சென்றுவிட்டு, கமல் கலந்துக் கொள்ளாத காரணத்தினால் படக்குழு திரும்பியதும் நினைவுக் கூரத்தக்கது.